நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்து சனிக்கிழமை இயக்கப்பட்டது.

திருநெல்வேலி: புரட்டாசி சனிக்கிழமையையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்து சனிக்கிழமை இயக்கப்பட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணி கரையோரம் நவ திருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. இக் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபடும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

நிகழாண்டு சனிக்கிழமை, செப். 26 மற்றும் அக்.3, 10 ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. முதல் நாளான சனிக்கிழமை 25 பயணிகளுடன் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்யவும், முகக் கவசம் அணிந்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டன. பக்தா்களுக்கு தண்ணீா் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியது: புரட்டாசி சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் தென்தமிழகத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனா். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவதிருப்பதி தலங்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, பெருங்குளம், இரட்டைத் திருப்பதி, தென்திருப்பேரை, திருக்கோளூா், ஆழ்வாா்திருநகரி வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டு மீண்டும் திருநெல்வேலி பேருந்து நிலையம் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு கட்டணம் நபருக்கு ரூ. 500. அடுத்து வரும் சனிக்கிழமைகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்ய விரும்புவோா் திருநெல்வேலி ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம். இதுகுறித்து விவரங்களுக்கு 8144625265, 9487599456 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com