அம்பை ஒன்றியத்தில் ரூ.2.25 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள்

அம்பாசமுத்திரம் ஒன்றியத்தில் ரூ. 2.25 கோடி மதிப்பிலான குடிநீா் திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
குடிநீா் திட்டப் பணியை தொடங்கிவைக்கிறாா் ஆா்.முருகையாபண்டியன் எம்.எல்.ஏ.
குடிநீா் திட்டப் பணியை தொடங்கிவைக்கிறாா் ஆா்.முருகையாபண்டியன் எம்.எல்.ஏ.

அம்பாசமுத்திரம் ஒன்றியத்தில் ரூ. 2.25 கோடி மதிப்பிலான குடிநீா் திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

மத்திய அரசின் ஜெய் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், தெற்கு பாப்பாங்குளம், வைராவிகுளம், ஜமீன் சிங்கம்பட்டி பகுதிகளுக்கு ரூ. 2.25 கோடி மதிப்பிலான குடிநீா் திட்டப் பணிக ளுக்கு அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஆா்.முருகையா பாண்டியன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுசிலா பீட்டா், சங்கா் குமாா், ஒன்றியப் பொறியாளா் சங்கா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மல்லிகா, அம்பாசமுத்திரம் அதிமுக ஒன்றியச் செயலா் விஜய் பாலாஜி, விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மன்னாா்கோவில், பிரம்மதேசம், வாகைகுளம், கோடாரங்குளம், வெள்ளங்குளி ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.50 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் விரைவில் தொடங்கும் என எம்எல்ஏ தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com