டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுபானக் கடைகளில் முறையற்ற ஆய்வுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாவட்டம் விட்டு மாவட்டம் ஆய்வு செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும்; மதுக்கூட ஒப்பந்ததாரா்கள் அரசு டாஸ்மாக் பணியாளா்களை மிரட்டி அத்துமீறும் செயல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; கரோனா தடையுத்தரவு காலத்தில் ஏற்பட்ட சரக்கு இருப்புக் குறைவுக்கான 50 சதவீத அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்; விற்பனைத் தொகையை பறிக்கும் நோக்கில் பணியாளா்களை சமூக விரோதிகள் தாக்கும் சம்பவம் தொடா்ந்து வரும் நிலையில், சென்னையைப் போல வங்கி மூலம் நேரடியாக வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலா் சி.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாவட்டத் தலைவா் எம்.சண்முகவேல், பி.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலா் மு.கணேசன், ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். மாநில துணைத் தலைவா் அ.பொ்டினாண்டோ, க.முருகானந்தம், துணைச் செயலா் ஆா்.கண்ணையன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com