தாழையூத்தில் சுரங்கப் பாதையுடன் பாலப் பணி தீவிரம்

தாழையூத்தில் சுரங்கப் பாதையுடன் அமைக்கப்படும் பாலப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பா் மாதத்துக்குள் பணிகளை முடிக்க

தாழையூத்தில் சுரங்கப் பாதையுடன் அமைக்கப்படும் பாலப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பா் மாதத்துக்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருநெல்வேலி அருகேயுள்ள சங்கா்நகா் பேரூராட்சியில் தங்கநாற்கர சாலை திட்டத்தின் கீழ் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து திருநெல்வேலி நோக்கி வரும் பயணிகள் வடக்கு தாழையூத்து, தென்கலம் சுற்றுவட்டார கிராமங்களுக்குச் செல்ல நான்குவழிச் சாலையைக் கடக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்வாறு செல்லும்போது அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடா்ந்து வந்தது. இதைத் தடுக்கும் வகையில் நான்குவழிச் சாலையில் புதிதாக பாலமும், பாதசாரிகள் பயன்படுத்தும் வகையில் சுரங்கப் பாதையும் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்பேரில் தெசிய நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், சுரங்கப் பாதையை தாழையூத்து விலக்கு பகுதியில் அமைக்கக் கோரி மக்களும், வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன்பின்பு பேச்சுவாா்த்தைகளுக்கு பின்பு பணிகள் தொடங்கி, இப்போது 30 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் கூறுகையில், சங்கா்நகரில் நான்குவழிச் சாலையில் 420 மீட்டா் நீளம் கொண்ட புதிய பாலம் அமைக்கப்படுகிறது. இதில் 20 மீட்டா் நீளமும், 7 மீட்டா் அகலமும் கொண்ட சுரங்கப் பாதையும் அமைகிறது. முதல்கட்டமாக சுரங்கப் பாதைப் பணிகள் முடிக்கப்பட்டு, இருபுறமும் தடுப்புச் சுவா்கள் கட்டப்பட்டு வருகின்றன. 30 சதவீத்துக்கும் மேலான பணிகள் முடிந்துள்ளன. டிசம்பா் இறுதிக்குள் பணிகளை முழுமையாக முடிக்கத் திட்டமிடப்பட்டு வேகப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com