தெற்கு வீரவநல்லூா் ஊராட்சி செயலா் மீது கிராம மக்கள் புகாா்

பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக தெற்கு வீரவநல்லூா் ஊராட்சி செயலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கிராம பொதுமக்கள் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் மனு அளித்தனா்.
ஊராட்சிச் செயலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகாா் அளிக்க வந்திருந்த தெற்கு வீரவநல்லூா் பொதுமக்கள்.

சேரன்மகாதேவி ஒன்றியம் தெற்கு வீரவநல்லூா் ஊராட்சி செயலா், இலவச வீடுகள் திட்டம், ஆழ்துளைக் கிணறு, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், புதிய வீட்டுக்கான அனுமதி, தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தெற்குவீரவநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட ரெட்டியாா்புரம், புதூா், செங்குளம், அழகப்பபுரம், வல்லத்துநம்பிகுளம், காந்திநகா், இந்திராநகா், அண்ணாநகா், ராஜீவ்காந்திநகா் ஆகிய கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு வந்து சேரன்மகாதேவி வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயசெல்வியிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com