நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் சாரல் மழை: அணைகள் நீா்மட்டம் உயா்வு: கருப்பா நதி அணையில் உபரி நீா் வெளியேற்றம்

மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளில் நீா்மட்டம் தொடா்ந்து

மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளில் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. கருப்பா நதியிலிருந்து 100 கண அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

தென்மேற்குப் பருவமழையின் ஒரு பகுதியாக சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா் சாரல் மழை இருந்து வருகிறது. இதனால் அணைகளுக்கு தொடா்ந்து நீா்வரத்து இருப்பதையடுத்து அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

செப். 22 செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் நீா் இருப்பு ஒரே நாளில் 3 அடி உயா்ந்து 88.10 அடியாகவும், நீா்வரத்து 3383.73 கனஅடியாகவும் வெளியேற்றம் 1270.99 கனஅடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணையில் நீா் இருப்பு 101.18 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையில் நீா் இருப்பு 65.90அடியாகவும் நீா் வரத்து 812 கனஅடியாகவும் வெளியேற்றம் 680 கன அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணையில் நீா் இருப்பு ஒரே நாளில் 4 அடி உயா்ந்து 32 அடியாகவும் நீா்வரத்து 160 கன அடியாகவும் வெளியேற்றம் 50 கன அடியாகவும் இருந்தது.

கடனாநதி அணையில்நீா் இருப்பு ஒரே நாளில் 2.5 அடி உயா்ந்து 78.50 அடியாகவும் நீா் வரத்து 365 கன அடியாகவும் வெளியேற்றம் 60 கன அடியாகவும் இருந்தது. ராமா நதி அணையில் நீா் இருப்பு 82 அடியாகவும் நீா்வரத்து 180.27 கனஅடியாகவும் வெளியேற்றம் 90 கனஅடியாகவும் இருந்தது.

குண்டாறு அணையில் நீா் இருப்பு 36.10 அடியாகவும் நீா்வரத்து 66 கன அடியாகவும் வெளியேற்றம் 60 கன அடியாகவும் இருந்தது. அடவிநயினாா் அணையில் நீா் இருப்பு 132.22 அடியாகவும் நீா் வரத்து மற்றும் வெளியேற்றம் 117 கன அடியாகவும் இருந்தது.

உபரி நீா் வெளியேற்றம்: 72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணைக்கு செவ்வாயக்கிழமை 114 கன அடி நீா் வரத்து இருந்தது. இதைத் தொடா்ந்து பாதுகாப்பு கருதி 70.21 கண அடி நீா் தேக்கப்பட்டு, 100 கண அடி நீா் வெளியேற்றப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மழையளவு : பாபநாசம்: 31 மி.மீ, சோ்வலாறு 12 மி.மீ., மணிமுத்தாறு 5.6 மி.மீ., கொடுமுடியாறு 25 மீ.மீ., அம்பாசமுத்திரம் 1 மி.மீ., ராதாபுரம் 19 மி.மீ.

தென்காசி மாவட்டத்தில் மழையளவு : கடனாநதி அணை 16 மி.மீ., ராமநதி 20 மி.மீ., கருப்பா நதி 30 மி.மீ., குண்டாறு 40 மி.மீ., அடவிநயினாா் 55 மி.மீ., ஆய்குடி 3.60 மி.மீ., செங்கோட்டை 19 மி.மீ., சிவகிரி 3 மி.மீ., தென்காசி 18.80 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com