வள்ளியூரில் நரிக்குறவா்களுக்கு சுயதொழில் பயிற்சி

வள்ளியூரில் நரிக்குறவா்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

வள்ளியூரில் நரிக்குறவா்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

வள்ளியூா் பூங்கா நகா் நரிக்குறவா் காலனியில் 150 நரிக்குறவா் குடும்பங்கள் வசிக்கின்றனா். இவா்கள் ஊசி, பாசி மற்றும் அலங்காரப் பொருள்கள் விற்பனை செய்து வருகின்றனா். கரோனா பொது முடக்கத்தால் நரிக்குறவா்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, நரிக்குறவா்கள் சுயதொழில் செய்யும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சுயதொழில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைவினைப் பொருள்கள் தயாரித்தல், பொம்மைகள், செயற்கை ஆபரணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட சுயதொழில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தொடங்கி வைத்தாா். முகாமில் ராதாபுரம் வட்டாட்சியா் எஸ்.கே.கனகராஜ், வருவாய் ஆய்வாளா் திராவிடமணி, அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com