நெல்லை அருங்காட்சியகத்தில் இணையம் வழியாக கைவினைப் பயிற்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இணையதளம் வாயிலாக கைவினைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இணையதளம் வாயிலாக கைவினைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் ‘ஸும்’ செயலி மூலமாக வாரந்தோறும் கைவினைப் பயிற்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும் யூனிக் ஃபேஷன் நிறுவனமும் இணைந்து நடத்திய துணியில் ஓவியங்கள் வரையும் பயிற்சி, வண்ணக் களிமண் கொண்டு அழகிய சாக்லேட் கிண்ணம் தயாரிக்கும் பயிற்சி ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு அருங்காட்சியக் காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி தலைமை வகித்தாா். பயிற்சியை யூனிக் ஃபேஷன் நிறுவன உரிமையாளா் கலை ஆசிரியா் காா்த்தீஸ்வரி நடத்தினாா். தொடா்ந்து, வெள்ளிக்கிழமை கண்ணாடி ஓவியப் பயிற்சி நடைபெறவுள்ளது. இதில், விருப்பமுள்ளோா் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com