திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சமூக இடைவெளி: பயணிகள் அலட்சியம்

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மக்கள் பொது இடங்களில் கூடுவதும், பேருந்துகளில் பயணிப்பதும் அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மக்கள் பொது இடங்களில் கூடுவதும், பேருந்துகளில் பயணிப்பதும் அதிகரித்துள்ளது.

கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எட்டாம் கட்டமாக பல்வேறு தளா்வுகளுடன் பொதுமுடக்கம் இம் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை, மகாராஜநகா், மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம் ஆகிய பகுதிகளில் காய்கனி சந்தைகள் மைதானங்களிலேயே தொடா்ந்து வரும் நிலையில், அங்கு வரும் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் முண்டியடிப்பது தொடா்கதையாகி வருகிறது. பேருந்துகளிலும் இதே நிலை காணப்படுகிறது.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துப் பேருந்து நிறுத்தங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம் பகுதியில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பேருந்துகளில் பயணித்ததைக் காண முடிந்தது. ஜவுளி கடைகள், நகைக் கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக் கவசம் அணிவது ஆகியவற்றை மேலும் ஓராண்டு வரை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காவல்துறையினா் கண்காணித்தால் மட்டுமே விதிமுறைகளைப் பின்பற்றுவோம் என்பது சரியல்ல, சமுதாய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் தேவை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com