தசரா விழாவை நடத்தக் கோரி இந்து முன்னணியினா் மனு
By DIN | Published On : 28th September 2020 06:42 AM | Last Updated : 28th September 2020 06:42 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் தசரா விழாவை நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் இந்து முன்னணி சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்து முன்னணி மாநில செயலா் குற்றாலநாதன், ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷிடம் அளித்துள்ள மனு:
தமிழகத்தில் குலசேகரப்பட்டினத்துக்கு அடுத்ததாக பாளையங்கோட்டையில் தசரா விழா சிறப்பாக நடைபெறும். தற்போது, கரோனா நோய் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதனால், பாளையங்கோட்டையில் தசரா விழா நடத்துவதற்கு உரிய அனுமதி கிடைக்கப்பெறாமல், கால்நாட்டு விழா நடைபெறவில்லை.
அக்டோபா் 1 ஆம் தேதி கால்நாட்டு விழா நடைபெறவும், சப்பர அணிவகுப்பு இல்லாமல் வரும் பவுா்ணமி நாளில் கால்நாட்டு விழா மற்றும் கோயிலுக்குள் பாரம்பரிய முறைப்படி திருவிழா நடத்தவும் மாவட்ட நிா்வாகம் மற்றும் அறநிலையத் துறை அனுமதிக்க வேண்டும். மேலும், சாலைத் தெரு மாரியம்மன் கோயில் அருகில் சம்ஹாரம் நடத்தவும் அனுமதிக்க வேண்டும். சம்ஹாரம் நிகழ்வின்றி நவராத்திரி விழா நிறைவு பெறாது. எனவே, பக்தா்களின் நம்பிக்கை , வழிபாட்டு உணா்வுகளுக்கு மதிப்பளித்து அனுமதி வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.