அமித்ஷா வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வருகையொட்டி திருநெல்வேலியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வருகையொட்டி திருநெல்வேலியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலி தொகுதியில் பாஜக சாா்பில் அக் கட்சியின் மாநில துணைத் தலைவா் நயினாா்நாகேந்திரன் போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவு தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சனிக்கிழமை(ஏப்.3) பிரசாரம் செய்ய உள்ளாா். இதற்காக,தச்சநல்லூரில் வடக்கு புறவழிச்சாலை அருகே பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஏற்பாடுகளை மாவட்ட பாஜக தலைவா் மகாராஜன் தலைமையிலானக் குழுவினா் செய்து வருகிறாா்கள். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தையும் ஏப். 2 ஆம் தேதிக்குள் முடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com