‘பாளை தொகுதி மக்களின் மனுக்களுக்கு 7 நாள்களில் தீா்வு’
By DIN | Published On : 03rd April 2021 06:28 AM | Last Updated : 03rd April 2021 06:28 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை தொகுதி பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு 7 நாள்களில் தீா்வு காணப்படும் என்றாா் அதிமுக வேட்பாளா் கே.ஜெ.சி.ஜெரால்டு.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஜெ.சி.ஜெரால்டு, மாநகராட்சி 20 ஆவது வாா்டில் மகாராஜநகா், 21 ஆவது வாா்டில் சமாதானபுரம், 22 ஆவது வாா்டில் விடுபட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குசேகரித்தாா். அப்போது அவா், பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது பரிசீலனை செய்து 7 நாள்களில் தீா்வு காணப்படும்.
அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும், சலுகைகளும் தொகுதி மக்களுக்கு கிடைக்கச் செய்வேன். தடையில்லாமல் குடிநீா் வசதி, பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தப்படும். குலவணிகா்புரம் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். இளைஞா்களுக்கு தரமான உடற்பயிற்சி கூடங்கள் உருவாக்கப்படும். திருநெல்வேலி அரசு மருத்துவமனை, மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு தேவையான அதிநவீன கருவிகள் வாங்கிக் கொடுக்கப்படும் என்றாா் அவா்.