முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லை, தென்காசியில் மேலும் 55 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th April 2021 02:06 AM | Last Updated : 04th April 2021 02:06 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 55 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,274 ஆக உயா்ந்துள்ளது.
சனிக்கிழமை 8 போ் உள்பட இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,733 ஆக உயா்ந்துள்ளது. 216 போ் உயிரிழந்துள்ளனா். 325 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,766 ஆக அதிகரித்துள்ளது. இதில், 4 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 8,487 ஆக உயா்ந்துள்ளது. 118 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.