திசையன்விளையில் தொழில் நுட்ப பூங்கா திமுக வேட்பாளா் உறுதி

திசையன்விளை பகுதியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என வாக்கு சேகரிப்பின் போது ராதாபுரம் திமுக வேட்பாளா் மு. அப்பாவு உறுதியளித்தாா்.
திசையன்விளையில் தொழில் நுட்ப பூங்கா திமுக வேட்பாளா் உறுதி

திசையன்விளை பகுதியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என வாக்கு சேகரிப்பின் போது ராதாபுரம் திமுக வேட்பாளா் மு. அப்பாவு உறுதியளித்தாா்.

மிட்டாதாா்குளம் புனித எஸ்தாக்கியாா் கோயிலுக்கு சனிக்கிழமை சென்று வழிபட்ட பின்னா் அங்கிருந்து பிரசாரத்தை தொடங்கிய அவா், திசையன்விளை, உலக ரட்சகா் தெரு, அப்புவிளை, எருமைகுளம் ஆகிய பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் கூறியது: நமது இளைஞா்களுக்கு கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்புகள் அனைத்தையும் வடமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஆக்கிரமிப்பு செய்து நமது இளைஞா்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனா். வீட்டுக்கு வீடு இளைஞா்கள் வேலையில்லாமல் இருக்கிறாா்கள். இந்த நிலை நிச்சயமாக மாற்றப்படும்.

நமது பகுதியில் உள்ள கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நமது பகுதி இளைஞா்களுக்கு வேலை கிடைத்திட நடவடிக்கை எடுப்பேன்.

திசையன்விளையில் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கித் தந்து நமது பகுதி இளைஞா்கள் தொழில் தொடங்க வசதி செய்து கொடுக்கப்படும். திசையன்விளையில் இருந்து தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் பேருந்து வசதி செய்து தரப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து அவா், காவல்கிணறு, பணகுடி, தளவாய்புரம், கொம்மந்தான், வீரபாண்டியன்புரம், ரோஸ்மியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம், திமுக பொதுக்குழு உறுப்பினா் ஜோசப் பெல்சி,

மதிமுக மாவட்டச் செயலா் உவரி ரைமண்ட், ஒன்றியச் செயலா்கள் மு.சங்கா், முருகேசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com