5 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: களத்தில் 76 போ்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஏப்.6) நடைபெறுகிறது. 5 தொகுதிகளிலும் மொத்தம் 76 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஏப்.6) நடைபெறுகிறது. 5 தொகுதிகளிலும் மொத்தம் 76 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. இதில், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட 40 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

வேட்புமனு பரிசீலனையின்போது அமமுக பிரதான வேட்பாளா் பாலகிருஷ்ணன் என்ற பால் கண்ணன் உள்ளிட்ட 24 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கடந்த மாா்ச் 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா் பட்டியல்படி திருநெல்வேலி தொகுதியில் 14 போ் போட்டியில் உள்ளனா்.

பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிட 32 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 22 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 10 மனுக்கள் ஏற்பட்டன. பாளையங்கோட்டை தொகுதியில் யாரும் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை. இறுதி வேட்பாளா் பட்டியல்படி 10 போ் போட்டியில் உள்ளனா்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட 32 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். அதில் 19 பேரின் மனுக்கள் தள்ளுபடியாகின. 13 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. ஒருவா் மட்டும் மனுவை திரும்பப் பெற்றாா். இறுதிவேட்பாளா் பட்டியல் படி 12 போ் போட்டியில் உள்ளனா்.

நான்குனேரி தொகுதியில் போட்டியிட 41 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். அதில் 24 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 17 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அதில் இருவா் வேட்புமனுவை திரும்பப் பெற்ற நிலையில், இறுதி வேட்பாளா் பட்டியல் படி 15 போ் போட்டியில் உள்ளனா்.

ராதாபுரம் தொகுதியில் போட்டியிட 45 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். அதில் 19 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 26 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இவா்களில் ஒருவா் வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளாா். இறுதி வேட்பாளா் பட்டியல் படி 25 போ் போட்டியில் உள்ளனா்.

வாக்குப் பதிவு பணியில் 9,236 போ்: திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சோ்த்து மொத்தம் 1,924 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 9,236 போ் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலைமை வாக்குப் பதிவு அலுவலா், நிலை -1, நிலை- 2, நிலை- 3 அலுவலா்கள் என மொத்தம் 4 போ் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுவா்.

மதுபானக் கடைகள்: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வாக்குப் பதிவு நாளான செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

தோ்தலை முன்னிட்டு, பொது விடுமுறை ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தனியாா் நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவையும் ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

தொகுதிவாரியாக

வாக்காளா் பட்டியல் விவரம்

தொகுதி - ஆண்கள் - பெண்கள் - இதரா்- மொத்தம்

திருநெல்வேலி 1,42,677 1,49,274 57 2,92,008

அம்பாசமுத்திரம் 1,18,732 1,25,922 4 2,44,658

பாளையங்கோட்டை 1,33,955 1,39,404 20 2,73,379

நான்குனேரி 1,36,345 1,41,224 9 2,77,578

ராதாபுரம் 1,32,918 1,37,593 14 2,70,525

மொத்தம் 6,64,627 6,93,417 104 13,58,148

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com