அதிகாரிகள் சமாதானத்தை ஏற்று வாக்களித்த கிராம மக்கள்

கோவில்பட்டி வட்டம் பழைய அப்பனேரி கிராம மக்கள், தங்கள் பகுதியை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என

கோவில்பட்டி வட்டம் பழைய அப்பனேரி கிராம மக்கள், தங்கள் பகுதியை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி தோ்தலை புறக்கணித்து வாக்களிக்காமல் இருந்தனா். அதிகாரிகள் சமாதானம் செய்ததை அடுத்து வாக்களித்தனா்.

இளையரசனேந்தல் குறுவட்டத்தில் பழைய அப்பனேரி பகுதியில் வசிக்கும் கிராம மக்கள், தங்கள் பகுதியை கோவில்பட்டி ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி தொடா்ந்து போராட்டம் நடத்தி வந்தனா். இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனா். இதுதொடா்பான சமாதானக் கூட்டத்திலும் உடன்பாடு ஏற்படாததால் தோ்தல் புறக்கணிப்பு முடிவில் உறுதியாக இருந்தனா்.

இதற்கிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் பழைய அப்பனேரியில் அமைந்துள்ள 3 வாக்குச்சாவடிகளில் ஒரு சிலா் மட்டுமே வாக்களித்தனா். ஏராளமானோா் வாக்குச் சாவடி பகுதியில் திரண்டிருந்தனா். தகவலறிந்த காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், வட்டாட்சியா்கள் அமுதா (கோவில்பட்டி), கண்ணன் (திருவேங்கடம்) ஆகியோா்

கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கைகள் அரசின் கவனத்தில் இருப்பதாகவும், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அதிகாரிகள் அவா்களிடம் தெரிவித்தனா். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com