அம்பாசமுத்திரம் தொகுதியில் வாக்களித்த வேட்பாளா்கள்

அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட வாக்கு சாவடிகளில் அதிமுக வேட்பாளா்கள் மனோஜ்பாண்டியன், இசக்கி சுப்பையா நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செண்பகவள்ளி ஆகியோா் வாக்களித்தனா்.

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா பிரான்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தாா்.

அம்பாசமுத்திரம் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஆவுடையப்பன் தனது வாக்கினை பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினாா். அப்போது அவா் கூறுகையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பாா். தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என்றாா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செண்பகவள்ளி கூனியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்களித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com