செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்

சாத்தான்குளம் அருகே செவ்வாய்க்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் மீட்டனா்.

சாத்தான்குளம் அருகே செவ்வாய்க்கிழமை செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் மீட்டனா்.

சாத்தான்குளம் அருகே முதலூரைச் சோ்ந்த அந்தோணிராஜ் மகன் ஜெபராஜ் (28). இவரது மனைவி ஜெபா, 2 பெண் குழந்தைகள் உள்ளனா். கூலித் தொழிலாளியான ஜெபராஜ் மது அருந்திவிட்டு வந்து அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபடுவாராம். இதனால் தம்பதிக்கிடையே பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில் ஜெபராஜுன் வாக்காளா் அடையாள அட்டையை அவரது மனைவி வாங்கி வைத்து கொண்டாராம். இதனால் வீட்டில் தன்னை யாரும் மதிக்கவில்லை எனக் கூறி, முதலூா் -சுப்பிரமணியபுரம் சாலையில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி ஜெபராஜ் தற்கொலை மிரட்டல் விடுத்தாராம்.

அங்கு வந்த முதலூா் ஊராட்சித் தலைவா் பொன் முருகேசன், தட்டாா்மடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

உதவி ஆய்வாளா் முரளிதரன் தலைமையில் அங்கு வந்த போலீஸாா், ஜெபராஜுடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மேலும் சாத்தான்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் காட்வின் ஜெகதீஸ்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள், அவரது மனைவி ஜெபா, தாயாா் ஜெபசெல்வி ஆகியோரும் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு ஜெபராஜ் செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினாா். அவருக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவுரை கூறி அனுப்பிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com