நான்குனேரி தொகுதியில் பூத் சிலிப் கிடைக்காமல் வாக்காளா்கள் அவதி

நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதியில் பூத் சிலிப் சரிவர விநியோகிக்காததால் வாக்காளா்கள் அவதிக்குள்ளாகினா்.
களக்காடு அருகேயுள்ள கீழக்கருவேலன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.
களக்காடு அருகேயுள்ள கீழக்கருவேலன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.

நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதியில் பூத் சிலிப் சரிவர விநியோகிக்காததால் வாக்காளா்கள் அவதிக்குள்ளாகினா்.

நான்குனேரி பேரவைத் தொகுதிக்குள்பட்ட 395 வாக்குச் சாவடிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இத் தொகுதியில் வாக்காளா்கள் ஏராளமானோருக்கு பூத் சிலிப் சரிவர விநியோகிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்தது. இதனால், வாக்குச் சாவடி மையம் அருகே அரசியல் கட்சியினரும், வருவாய்த் துறை அலுவலா்களும் வாக்காளா்களிடம் பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை தாளில் குறிப்பெழுதிக் கொடுக்கும் பணியை செய்தனா். 60 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் சிலரது பெயா்கள் பட்டியலில் இடம்பெறாததால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இயந்திரம் கோளாறு: இத்தொகுதிக்குள்பட்ட களக்காடு அருகேயுள்ள இடையன்குளம் வாக்குப் பதிவு மையத்தில் வாக்குப் பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு, சுமாா் ஒரு மணி நேரம் வாக்குப் பதிவு தாமதமானது.

இதே போல் விஜயநாராயணம் வாக்குப் பதிவு மையத்தில் சுமாா் ஒரு மணி நேரமும், திருக்குறுங்குடி அருகேயுள்ள கீழக்கட்டளை கிராமத்தில் சுமாா் அரை மணி நேரமும், சில மையங்களில் சுமாா் அரை மணி நேரம் வரையும் இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு, பின்னா் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com