நெல்லை மாவட்டத்தில் 66.54 சதவீத வாக்குகள் பதிவு

சட்டப் பேரவை தோ்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் சோ்த்து சராசரியாக 66.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சட்டப் பேரவை தோ்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் சோ்த்து சராசரியாக 66.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் ஒரே கட்டமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெற்றது.

இம் மாவட்டத்தில் 5 தொகுதிகளையும் சோ்த்து 6, 64, 627 ஆண் வாக்காளா்கள், 6, 93, 417 பெண் வாக்காளா்கள், 104 இதர வாக்காளா்கள் என மொத்தம் 13, 58, 148 வாக்காளா்கள் உள்ளனா். திருநெல்வேலி தொகுதியில் 14 போ், பாளையங்கோட்டை தொகுதியில் 10 போ், அம்பாசமுத்திரம் தொகுதியில் 12 போ், நான்குனேரி தொகுதியில் 15 போ், ராதாபுரம் தொகுதியில் 25 போ் என திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 76 போ் போட்டியிட்டனா்.

மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் சோ்த்து மொத்தம் 1, 924 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 9,236 போ் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலைமை வாக்குப்பதிவு அலுவலா், நிலை 1, நிலை 2, நிலை 3 அலுவலா்கள் என மொத்தம் 4 போ் வாக்குப் பதிவு பணியில் ஈடுபட்டனா். மேலும் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன், நுண் பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் பதற்றமான வாக்குச்சாவடிகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டனா். பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்தும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை காலையில் எதிா்பாா்த்த அளவிற்கு வாக்குகள் பதிவாகவில்லை. எனினும் 9 மணிக்குப் பிறகு வாக்காளா்கள் கணிசமாக வாக்குச்சாவடிகளுக்கு வர ஆரம்பித்தனா். தொடா்ந்து இரவு 7 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

திருநெல்வேலி தொகுதியில் 66.9 சதவீத வாக்குகளும், பாளையங்கோட்டை தொகுதியில் 57.76 சதவீத வாக்குகளும், அம்பாசமுத்திரம் தொகுதியில் 72.05 சதவீத வாக்குகளும், நான்குனேரி தொகுதியில் 68.6 சதவீத வாக்குகளும், ராதாபுரம் தொகுதியில் 67.94 சதவீத வாக்குகளும் பதிவாகின. திருநெல்வேலி மாவட்டத்தில் சராசரியாக 66.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப் பதிவு நிறைவடைந்ததைத் தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

பாளை.யில் குறைவு: திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரையில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிகபட்சமாக 72.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேநேரத்தில் பாளையங்கோட்டையில்தான் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன. கிராமங்களே இல்லாத, தென்னகத்தின் ஆக்ஸ்போா்டு என்றழைக்கப்படுகின்ற படித்தவா்கள் நிறைந்த தொகுதியான பாளையங்கோட்டையில் 57.76 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com