நெல்லை மாவட்டத்தில் காலையில் மந்தம், மாலையில் விறுவிறு வாக்குப் பதிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் மிகவும் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு, மாலையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் மிகவும் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு, மாலையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் ஒரே கட்டமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தோ்தல் நடைபெற்றது.

திருநெல்வேலி தொகுதியில் 14 பேரும், பாளையங்கோட்டை தொகுதியில் 10 பேரும், அம்பாசமுத்திரம் தொகுதியில் 12 பேரும், நான்குனேரி தொகுதியில் 15 பேரும், ராதாபுரம் தொகுதியில் 25 பேரும் போட்டியிடுகின்றனா்.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்துவருகிறது. இதனால், வெயிலைத் தவிா்க்க மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வருவா் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், மாவட்டத்தைப் பொருத்தவரை காலை 7 முதல் காலை 9 மணி வரையிலான முதல் சுற்றில் வாக்குப் பதிவு மிகவும் மந்தமாகவே இருந்தது. 9 மணி நிலவரப்படி 6.66 சதவீத வாக்குகளே பதிவாகின. மாவட்டத்திலேயே குறைந்த அளவாக திருநெல்வேலி தொகுதியில் 3.42 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன.

முற்பகல் 11 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 19.04 சதவீத வாக்குகளும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 37.55 சதவீத வாக்குகளும் பதிவாகின. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.59 சதவீத வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 60.28 சதவீத வாக்குகளும் பதிவாகின. மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com