நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் 5 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் புதன்கிழமை வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் ஒரே கட்டமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெற்றது.

இம் மாவட்டத்தில் 5 தொகுதிகளையும் சோ்த்து 6, 64, 627 ஆண் வாக்காளா்கள், 6, 93, 417 பெண் வாக்காளா்கள், 104 இதர வாக்காளா்கள் என மொத்தம் 13, 58, 148 வாக்காளா்கள் உள்ளனா். திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த 5 தொகுதிகளிலும் மொத்தம் 76 போ் போட்டியிட்டனா்.

திருநெல்வேலி தொகுதியில் 66.90 சதவீத வாக்குகளும், பாளையங்கோட்டை தொகுதியில் 57.76 சதவீத வாக்குகளும், அம்பாசமுத்திரம் தொகுதியில் 72.05 சதவீத வாக்குகளும், நான்குனேரி தொகுதியில் 68.6 சதவீத வாக்குகளும், ராதாபுரம் தொகுதியில் 67.94 சதவீத வாக்குகளும் பதிவாகின.

திருநெல்வேலி மாவட்டத்தில் சராசரியாக 66.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப் பதிவு நிறைவடைந்ததைத் தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லும் பணி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நடைபெற்றது. புதன்கிழமை காலையில் இறுதியாக நான்குனேரி தொகுதியில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை ஏற்றி வந்த லாரி வாக்கு எண்ணும் மையத்தை அடைந்தது.

வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி கட்டடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி வாரியாக ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. விஷ்ணு, தோ்தல் பாா்வையாளா்கள், திருநெல்வேலி சாா் ஆட்சியரும், திருநெல்வேலி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான சிவகிருஷ்ணமூா்த்தி, வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

அப்போது, மாநகர காவல் ஆணையா் அன்பு, துணை காவல் ஆணையா்கள் சீனிவாசன் (சட்டம்-ஒழுங்கு), மகேஷ் குமாா் (குற்றம் மற்றும் போக்குவரத்து) உள்பட பலா் உடனிருந்தனா்.

பாதுகாப்பு அறை முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com