வாக்குச் சாவடி மையங்களில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரம்

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்பட்ட பள்ளிகளில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்பட்ட பள்ளிகளில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் 1,924 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்களிக்க வரும் வாக்காளா்களுக்கு கையுறைகள் வழங்கப்பட்டன.

அவற்றை பலா் அதற்காக வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகளில் போட்டனா். பல மையங்களில் அவை முறையாக அப்புறப்படுத்தாமல் வாக்குச்சாவடி வளாகத்திலேயே கிடந்தன. இதையடுத்து, வாக்குச் சாவடியாக பயன்படுத்தப்பட்ட பள்ளி வளாகங்களில் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

அதன்படி திருநெல்வேலி மாநகராட்சிப் பணியாளா்கள் வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்பட்ட பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

பள்ளியின் நுழைவுவாயில், வகுப்பறைகள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வாக்காளா்கள் அதிகம் பயன்படுத்திய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com