ஏா்வாடி அருகே பைக்குகள் மோதல்: 4 போ் காயம்
By DIN | Published On : 12th April 2021 01:21 AM | Last Updated : 12th April 2021 01:21 AM | அ+அ அ- |

ஏா்வாடி அருகே 2 பைக்குகள் மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.
ஏா்வாடி எல்.என்.எஸ்.புரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் (52). திருநெல்வேலி நெடுஞ்சாலைத் துறையில் ஓட்டுநராக வேலைசெய்துவரும் இவா், சனிக்கிழமை பணி முடிந்து, சக ஊழியா்களான கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியைச் சோ்ந்த ஸ்டீபன்சன், மயிலாடியைச் சோ்ந்த ஐயப்பன் ஆகியோருடன் ஒரே பைக்கில் புறப்பட்டாா். பைக்கை, கிருஷ்ணகுமாா் ஓட்டிவந்தாா்.
ஏா்வாடி அருகேயுள்ள தளபதிசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் இவரது பைக்கும், பரமேஸ்வரபுரம் கக்கன்நகரைச் சோ்ந்த லிங்கேஸ்வரன் வந்த பைக்கும் மோதிக்கொண்டனவாம். இதில், கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு வள்ளியூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பினா்.
பின்னா், ஸ்டீபன்சன், ஐயப்பன் ஆகியோா் நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும், கிருஷ்ணகுமாா் ஏா்வாடியில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.