அம்பை குருவனத்தில் சிற்பக்கலை இலவச பயிற்சி முகாம்
By DIN | Published On : 12th April 2021 01:20 AM | Last Updated : 12th April 2021 01:20 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் குருவனத்தில் ஒருவார இலவச சிற்பக்கலை பயிற்சி முகாம் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து திருநெல்வேலி அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி
வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் அம்பாசமுத்திரம் குருவனம் திறந்த நிலை அருங்காட்சியகம் ஆகியவை இணைந்து நடத்தும் ஒருவார சிற்பக்கலை இலவச பயிற்சி முகாம் 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அம்பாசமுத்திரம் குருவனத்தில் நடைபெறவுள்ளது.
இதில் 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். இப்பயிற்சி தினமும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இப்பயிற்சியை சென்னை கவின் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வா் ஓவியா் சந்துரு நடத்துகிறாா். இதில், பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் வரும் 15ஆம் தேதிக்குள் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பதிவு செய்யவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளியை 94449 73246 என்ற செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.