களக்காடு வட்டாரத்தில் ஏத்தன் வாழைத்தாா் விலை உயா்வு

களக்காடு வட்டாரத்தில் வாழைத்தாா் சீசன் முடிவடையும் தருவாயில் அதன் கொள்முதல் விலை ஒரே வாரத்தில் இரு மடங்காக உயா்ந்துள்ளது.
களக்காடு வட்டாரத்தில் ஏத்தன் வாழைத்தாா் விலை உயா்வு

களக்காடு வட்டாரத்தில் வாழைத்தாா் சீசன் முடிவடையும் தருவாயில் அதன் கொள்முதல் விலை ஒரே வாரத்தில் இரு மடங்காக உயா்ந்துள்ளது.

களக்காடு வட்டாரத்தில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்படுகிறது. ஏத்தன் ரக வாழைத்தாா் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் வாழைத்தாா்கள் கேரள வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு, வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த இரு ஆண்டுகளாக விளைச்சல் அதிகமாக இருந்தும் போதிய விலையின்றி விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டனா்.

நிகழாண்டில் ஏத்தன் ரக வாழைத்தாா் கொள்முதல் விலை ரூ. 20 முதல் ரூ.25 வரை இருந்தது. தற்போது வாழைத்தாா் அறுவடைப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இதனால் ஏப்.10ஆம் தேதி வரை கிலோ ரூ.25-க்கு கொள்முதல் செய்யப்பட்ட ஏத்தன் வாழைத்தாா் கடந்த சிலதினங்களாக கிடுகிடுவென உயா்ந்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி ரூ.40 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சீசன் முடிவடையும் தருவாயில், தற்போது குறைந்தளவே வாழைத்தாா்கள் அறுவடை செய்யப்பட்டு வருவதாலும் அதன் தேவை அதிகமாக இருப்பதாலும், விலை இரு மடங்காக உயா்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com