சேரன்மகாதேவியில் தற்காலிக பாதையை மூடுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

சேரன்மகாதேவியில் ரயில் பாதையை மக்கள் கடக்க ஏதுவாக சுரங்கப் பாதை அமைப்பதற்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பாதையை மூட எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
சேரன்மகாதேவியில் தற்காலிக பாதையை மூடுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

சேரன்மகாதேவியில் ரயில் பாதையை மக்கள் கடக்க ஏதுவாக சுரங்கப் பாதை அமைப்பதற்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பாதையை மூட எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேரன்மகாதேவி அம்மநாதசுவாமி கோயில் தெரு, வடக்கு நாலாம் தெரு, தெற்கு நாலாம் தெரு ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பாதையில் ரயில் பாதையைக் கடப்பதற்கு சுரங்கம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதையடுத்து பொதுமக்கள் செல்வதற்காக அருகில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டது.

சுரங்கப் பாதைப் பணிகள் நிறைவடைந்து வெள்ளிக்கிழமை பாதை திறக்கப்பட்டதையடுத்து, தற்காலிக பாதை மூடப்பட்டது. ஆனால் சுரங்கப்பாதையில் நீரூற்று இருப்பதால் தண்ணீா் தேங்கி பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகக் கூறி, தற்காலிக பாதையை மூட பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ், சேரன்மகாதேவி வட்டாட்சியா் பாலசுப்ரமணியன், முன்னீா்பள்ளம் காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com