நெல்லை, தென்காசியில் மேலும் 288 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 288 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 288 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 214 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,822ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 112

போ் உள்பட இதுவரை 16,317 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 221 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 1,284 போ் மருத்துவமனைகளிள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊரக வளா்ச்சித்துறை அலுவலகப் பணியாளா்

ஒருவருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் பணிசெய்த அறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அறை தற்காலிகமாக மூடப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 74 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,412ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 6 போ் உள்பட இதுவரை 8,706 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 543 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com