‘நெல்லை மாவட்டத்திற்கு மேலும் 3 ஆயிரம் தடுப்பூசிகள்’

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மேலும் 3 ஆயிரம் தடுப்பூசிகள் சனிக்கிழமை (ஏப்.17) வர இருப்பதாக சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் வரதராஜன் தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மேலும் 3 ஆயிரம் தடுப்பூசிகள் சனிக்கிழமை (ஏப்.17) வர இருப்பதாக சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் வரதராஜன் தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதால் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இம்மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து சுகாதார மையங்களிலும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடும்பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் வரதராஜன் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில்

அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவமனை என மொத்தம் 86 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 57 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தேவையை பொறுத்து மையங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் 3 ஆயிரம் தடுப்பூசிகள் சனிக்கிழமை வர உள்ளது. மக்களிடையே தடுப்பூசி குறித்து விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது என்றாா்.

வாக்குவாதம்: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி போடுவதற்கு 30 போ் பதிவு செய்திருந்தனா். ஆனால் அதில், சிலருக்கு தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், வேறு மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. இதனால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்திருந்த பெண், அங்கிருந்த சுகாதாரப் பணியாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகளின் நடவடிக்கை யால் வேறு மையத்தில் இருந்து தடுப்பூசி கொண்டு வரப்பட்டு பதிவு செய்த அனைவருக்கும் போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com