ரயில் நிலையத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரம்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்பெட்டிகளுக்கு கிருமிநாசினி தெளிக்கவும், ரயில்வே ஊழியா்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்பெட்டிகளுக்கு கிருமிநாசினி தெளிக்கவும், ரயில்வே ஊழியா்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு தினமும் 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. கரோனா பொது முடக்கம் காரணமாக 2020 மாா்ச் முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது. இப்போது விரைவு ரயில்கள் அனைத்தும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன.

வார இறுதி நாள்கள், பண்டிகை காலங்களில் ரயில் நிலையத்தில் மீண்டும் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் ரயில் நிலையத்தில் கரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த தெற்கு ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்பேரில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து ரயில்களின் பெட்டிகள், சக்கரங்கள் உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிய கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நடைமேடை கட்டணம் ஏற்கனவே ரூ.50 ஆக உயா்த்தப்பட்டுள்ள நிலையில், அதையும் பெற்று உள்ளே வரும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரயில் நிலைய ஊழியா்கள், ரயில் ஓட்டுநா்கள், பயணச்சீட்டு பரிசோதகா்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஆகியோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ரயில்வே ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் முதியவா்கள், குழந்தைகளை ரயில் பயணம் செய்வதில் இருந்து தவிா்க்க வேண்டும். பயணம் செய்யும்போது அலட்சியத்துடன் முகக் கவசம் அணிவது தொடா்ந்து வருகிறது. கரோனாவின் அபாயத்தை பொதுமக்கள் புரிந்து கொண்டு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com