நெல்லையில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 4 போ் கைது

திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி பகுதியைச் சோ்ந்த ரெங்கபாலன் மகன் அன்புராஜன்(21), அதே பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் மகன் பிரதீப்(21), தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த குமரேசன் மகன் சோ்மதுரை (27), பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தைச் சோ்ந்த அந்தோணிராஜ் மகன் ஆறுமுகம் (22) ஆகிய 4 பேரும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் திருட்டு வழக்கு, கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இவா்கள் 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (குற்றம் - போக்குவரத்து) மகேஷ்குமாா், மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் - ஒழுங்கு) சீனிவாசன், காவல் உதவி ஆணையா்கள் எஸ்.பாலகுமாா், சதீஷ்குமாா் ஆகியோா் மாநகர காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்தனா்.

அதன்பேரில் அந்த 4 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர காவல் ஆணையா் அன்பு போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து 4 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com