நெல்லை, தென்காசியில் மேலும் 343 பேருக்கு கரோனா
By DIN | Published On : 18th April 2021 02:13 AM | Last Updated : 18th April 2021 02:13 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 343 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 246 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18,068 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 123 போ் உள்பட ிதுவரை குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 16,440 ஆக உயா்ந்துள்ளது.
221 போ் உயிரிழந்துள்ளனா். 1,407 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி -22 போ், சங்கரன்கோவில் 11 போ், ஆலங்குளம் 11 போ், கடையம் 2 போ், கீழப்பாவூா் 20 போ், குருவிகுளம் 5 போ், கடையநல்லூா் 4 போ், செங்கோட்டை 14 போ், மேலநீதநல்லூா் 2 போ், வாசுதேவநல்லூா் 6 போ் என மொத்தம் 97 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,509ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 73 போ் உள்பட இதுவரை 8,779 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 567 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.