களக்காடு அஞ்சலகத்தில் எடை இயந்திரம் பழுது: பொதுமக்கள் பாதிப்பு

களக்காடு கிளை அஞ்சலகத்தில் எடை இயந்திரம் பழுதால் அஞ்சல் அனுப்ப வந்து செல்லும் பொதுமக்கள் எடை போடுவதற்காக வணிக நிறுவனங்களுக்கு அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

களக்காடு கிளை அஞ்சலகத்தில் எடை இயந்திரம் பழுதால் அஞ்சல் அனுப்ப வந்து செல்லும் பொதுமக்கள் எடை போடுவதற்காக வணிக நிறுவனங்களுக்கு அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

களக்காடு பழைய பேருந்து நிலையம் கீழத் தெருவில் கீழ களக்காடு கிளை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அஞ்சலகம் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வீட்டின் மாடிப் பகுதியில் இயங்கி வருகிறது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை பழைய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிா்புறம் உள்ள பழைய சேதமடைந்த கட்டடத்தின் மாடிப் பகுதியில் இயங்கி வந்த இந்த அஞ்சலகத்தை தரைத்தளத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால் நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையில், அப்பகுதியில் இருந்து சுமாா் 300 மீட்டா் தொலைவில் உள்ள ஏற்கெனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு இயங்கிய மாடிப்பகுதியில் அமைந்துள்ள வாடகைக் கட்டடத்திற்கே மீண்டும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது இயங்கும் அஞ்சலகத்தின் கீழ் பகுதியில் உள்ள நுழைவுவாயில் கதவு பெரும்பாலான நேரங்களில் மூடப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தில் அஞ்சல் எடை பாா்க்கும் இயந்திரம் பழுதடைந்துள்ளது. ஏதாவது ஒரு கடைக்குச் சென்று அஞ்சல் எவ்வளவு எடை என பாா்த்து வருமாறு பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனா். இதனால் வயோதிகா்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்துள்ள எடை போடும் இயந்திரத்தை பழுதுநீக்கித் தரவும், அஞ்சலகம் தற்போது இயங்கும் இடம் குறித்து பழைய பேருந்து நிலையப் பகுதியில் போதிய அறிவிப்பு பலகைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com