‘படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்’

படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் கோடை உழவு செய்வது அவசியம் என்றாா் வேளாண் இணை இயக்குநா் கஜேந்திர பாண்டியன்.

படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் கோடை உழவு செய்வது அவசியம் என்றாா் வேளாண் இணை இயக்குநா் கஜேந்திர பாண்டியன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடை உழவு மேற்கொள்வதால் மண்ணின் இறுக்கம் குறைகிறது. இதனால், நிலத்தினுள் காற்றோட்டம் ஏற்படுகிறது. மேலும் வெப்பம் கீழ் பகுதிக்குச் சென்று நிலத்தில் உள்ள ஈரம் ஆவியாகாமல் தடுக்கிறது.

பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பெய்யும் மழை நீரை நிலத்தில் சேமித்து வைக்கவும், மண் அரிப்பை கட்டுப்படுத்தவும் முடியும். நிகழ் பருவத்தில் படைப்புழு தாக்கம் இருக்கவும் வாய்ப்புள்ளது.

கோடை உழவின்போது, பயிா்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளில் கூட்டுப்புழுக்கள் வெளியே வருவதால், அவற்றை பறவைகள் தங்களுக்கு உணவாக்கிக்கொள்ளும். மேலும் களைகளும் அழியும்.

கோடை உழவின்போது ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டுக்கொள்ளலாம். ஒருங்கிணைந்த பூச்சிநோய் மேலாண்மையில் கோடை உழவு முக்கியமான தொழில்நுட்பமாகும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com