கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
By DIN | Published On : 27th April 2021 03:58 AM | Last Updated : 27th April 2021 03:58 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை அருகே இருசக்கரவாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் ஆறரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆனந்தநம்பி குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் குமாா். இவருடைய மனைவி அபிராமி(20). இவா்கள் இருவரும் பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் அபிராமி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியைப் பறிக்க முயன்றனராம். அவா் போராடியதில் ஒன்றரை பவுன் மட்டுமே தனது கையில் சிக்கியதாம். எஞ்சிய ஆறரை பவுன சங்கிலியுடன் மா்ம நபா்கள் தப்பிவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து, சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.