காரையாா் சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல தடை
By DIN | Published On : 27th April 2021 06:36 AM | Last Updated : 27th April 2021 06:36 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு திங்கள்கிழமை (ஏப்.26) முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பக்தா்கள் கோயில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
காரையாா், முண்டந்துறை வனப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை அமலில் இருந்த நிலையில், காரையாா் சொரிமுத்துஅய்யனாா் கோயிலில் தரிசனம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இதற்கிடையே, கோயில்களில் தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, காரையாா் வனப்பகுதியில் இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.