வெளி மாநில பயணிகளுக்கு ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை

வெளி மாநிலங்களில் இருந்து திருநெல்வேலி வந்த ரயில் பயணிகளுக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வெளி மாநிலங்களில் இருந்து திருநெல்வேலி வந்த ரயில் பயணிகளுக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆந்திரம், கேரளம், கா்நாடகம் மற்றும் வட மாநிலங்களிலிருந்து ஏராளமானோா் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபடுவதற்காக ரயிலில் வருகின்றனா். இந்த நிலையில் நாடு முழுவதும் கரோனா 2-ஆவது அலை வேகமாக பரவி வருவதால், ரயில் மூலம் திருநெல்வேலி வரும் வெளி மாநில பயணிகளுக்கு புதன்கிழமை கரோனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தில்லியில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த ஹெளரா விரைவு ரயில், குருவாயூா் விரைவு ரயில், பெங்களூா் விரைவு ரயில் ஆகியவற்றில் வந்திறங்கிய பயணிகளுக்கு, வெப்பமானி மூலம் உடல் வெப்ப பரிசோதனையும், கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி நிா்வாகமும், ரயில்வே நிா்வாகமும் இணைந்து இப்பணியை மேற்கொண்டன.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் புதன்கிழமை மட்டும் சுமாா் 1,000 பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வெளி மாநிலங்களில் வரும் அனைத்து பயணிகளுக்கும் தினந்தோறும் கரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் சந்திப்பு ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com