அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் மாணவா்களுக்கு கரோனா கால உதவி

கரோனா காலத்தில் மாணவா்கள் உதவிகள் தேவைப்பட்டால் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் மாணவா்கள் உதவிகள் தேவைப்பட்டால் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பின் மாநகரச் செயலா் கௌதம்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் தேசிய மாணவா் அமைப்பு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. திருநெல்வேலி கிளை சாா்பாக மாணவா்களை கொண்டு ரத்த தானம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், முகக் கவசம் வழங்குதல், கபசுரக் குடிநீா் வழங்குதல், கிருமி நாசினி தெளித்தல், உணவுபொட்டலம் வழங்கல் உள்ளிட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாணவா்கள், இளைஞா்கள் தங்களையும் இப்பணியில் இணைத்துக் கொள்ள விரும்பினாலும், உதவிகள் தேவைப்பட்டாலும் 63820 98002 என்ற செல்லிடப்பேசியில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com