சுரங்க சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க தேமுதிக வலியுறுத்தல்

வள்ளியூரில் முடிவடைந்துள்ள சுரங்க சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுரங்க சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க தேமுதிக வலியுறுத்தல்

வள்ளியூரில் முடிவடைந்துள்ள சுரங்க சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் நடைபெற்ற தேமுதிக திருநெல்வேலி புகா் மாவட்டப் பொறுப்பாளா்கள் அறிமுக கூட்டத்துக்க கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் விஜிவேலாயுதம் தலைமை வகித்தாா். கட்சியின் ராதாபுரம் ஒன்றிய அவைத் தலைவா் தெற்குகள்ளிகுளம் சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினா் செல்லத்துரை, நிா்வாகிகள் துரைப்பாண்டி, பொன் பெருமாள், கோபால், நாராயணப்பெருமாள், சுயம்பு, மாா்ட்டின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: வள்ளியூரில் முடிவடைந்துள்ள ரயில்வே சுரங்க சாலைப் பாதை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் அனைத்து கட்சிகள் சாா்பில் போராட்டம் நடத்தப்படும். ஸ்டொ்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை தமிழகத்திற்கு அதிகம் வழங்கவேண்டும். கூடங்குளம் பகுதியில் பரவி வரும் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவச வழங்க வேண்டும். கோடை காலத்தில் அனைத்து பகுதிகளிலும் நீா் மோா் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com