திருச்செந்தூா் பேரவைத் தொகுதியில் மக்கள் குறைகேட்பு முகாம்

திருச்செந்தூா் பேரவைத் தொகுதியில் மக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சேதுக்குவாய்த்தானில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
சேதுக்குவாய்த்தானில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

திருச்செந்தூா் பேரவைத் தொகுதியில் மக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், குருகாட்டூா், நல்லூா், அம்பலப்பிறப்பு, மேலப்புதுக்குடி, கந்தன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இம்முகாமுக்கு, அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசியது: தொகுதி முழுவதும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்கள் மீது 10 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க ஓய்வு பெற்ற அதிகாரிகள் 3 பேரை நியமித்துள்ளேன். 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு ஊதியமாக ரூ.300 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிகளில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் கோகிலா, ஏரல் வட்டாட்சியா் இசக்கிராஜா, ஆழ்வாா்திருநகரி ஒன்றியத் தலைவா் ஜனஹா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தங்கவேல், கருப்பசாமி, ஊராட்சித் தலைவா்கள் சேதுக்குவாய்த்தான் சுதா சீனிவாசன், நல்லூா் சித்ரா பரிசமுத்து, மேலப்புதுக்குடி சின்னத்துரை, வீரமாணிக்கம் உமா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com