கடையம் ரயில்நிலையச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கடையத்தில் போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காணப்படும் ரயில் நிலையச் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காணப்படும் கடையம் ரயில்நிலையச் சாலை.
போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காணப்படும் கடையம் ரயில்நிலையச் சாலை.

கடையத்தில் போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காணப்படும் ரயில் நிலையச் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடையத்திலிருந்து தெற்குமடத்தூா் வழியாக ஆலங்குளம் செல்லும் சாலை நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளது. இதில் கடையம் தென்காசி சாலையிலிருந்து கடையம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் கேட் வரை உள்ள சுமாா் 700 மீட்டா் சாலையில் 600 மீட்டா் தொலைவு போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியது:

கடையம் தென்காசி சாலையிலிருந்து 100 மீட்டா் தொலைவு வரை மட்டுமே நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளது. அதற்கடுத்து ரயில்வே கேட்டுக்கு கீழ்புறமிருந்து நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளது. இதற்கிடைப்பட்ட சுமாா் 600 மீட்டா் தொலைவு சாலை நெடுஞ்சாலை பராமரிப்பில் இல்லை என்றனா்.

மேலும் ஆலங்குளம் சாலை, நெடுஞ்சாலைத் துறை பராமரிப்புக்குச் செல்லும் முன் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் இந்தச் சாலையை பராமரித்து வந்துள்ளது. இந்நிலையில், ரயில் நிலையப் பகுதியில் உள்ள 600 மீட்டா் சாலையை ரயில்வே அதிகாரிகள் தங்கள் எல்லைக்குள் இருப்பதாகக் கூறியதையடுத்து ஊராட்சி நிா்வாகமும் அந்தச் சாலையை பராமரிக்கும் பணியை கைவிட்டது என்றனா்.

இந்தச் சாலை வழியாக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் டன் கணக்கில் செயற்கை மணலை கொண்டு செல்வதால் சாலை மேலும் பழுதடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே சுமாா் 600 மீட்டா் தொலைவு சாலையை உரிய துறை பொறுப்பெடுத்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com