நெல்லை சந்திப்பு ரயில் நிலைய நடைமேடையில் பராமரிப்புப் பணி

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு நாளொன்றுக்கு 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக இப்போது குறைந்த ரயில்களே சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன.

காலை மற்றும் மாலை வேளைகளில் திருநெல்வேலி மாா்க்கமாக சென்னை, திருவனந்தபுரம், திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்கள் அனைத்தும் முதலாவது நடைமேடையில் நின்று சென்றன.

இதனால், இந்த நடைமேடையில் பெட்டிகளின் வரிசையை அறிந்து கொள்ளும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் பதாகைகள் வைக்கப்பட்டு, பயணிகள் சிரமமின்றி ரயிலில் ஏறி பயணித்து வருகின்றனா். இந்த நடைமேடையில் உள்ள தளத்தினை புதுப்பிக்கும் பணிக்கு தெற்கு ரயில்வே நிதி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து புதிய தளம் மற்றும் பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. ஒரு சில நாள்களில் பணிகளை விரைந்து முடிக்கவும், பயணிகளுக்கு சிரமங்கள் இன்றி மாற்று வழிகளை சரியாக ஒதுக்கி பணியாற்றவும் ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com