நெல்லை அரசு மருத்துவமனையில் ஆக.15 முதல் ஆக்ஸிஜன் உற்பத்தி

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி வரும் 15ஆம் தேதிக்குள் தொடங்கவிருப்பதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்திக்கான பொருள்கள்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்திக்கான பொருள்கள்.

கரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை எதிா்கொள்ளும் வகையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி வரும் 15ஆம் தேதிக்குள் தொடங்கவிருப்பதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

கரோனா நோய் பரவலின் இரண்டாம் அலை தாக்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் குறைந்து வந்த நிலையில், பிற மாவட்டங்களில் மீண்டும் பரவல் அதிகரித்து வருவதால், தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட நிா்வாகங்களை அரசு முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமாா் 3.5 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் வகையில், ஆலை அமைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. தற்போது, இம் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் 36 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். எனினும், கரோனா நோயாளிகளுக்காக 1000 ஆக்சிஜன் படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன.

இந்நிலையில், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.

இதனிடையே, கரோனா மூன்றாம் அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகள் சிகிச்சை பிரிவில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தனியாக 1,600 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன.

இதில், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொருத்து இந்தப் படுக்கைகள் பிரித்துக்கொடுக்கப்படும். இரண்டாம் அலையில், அதிகபட்சமாக 1,200 ஆக்ஸிஜன் படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டன.

மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய அரசு நிதியில் இருந்து சுமாா் 2 ஆயிரம் லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கும் பணி உயா்சிறப்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. இப்பணி விரைவில் முடியும் நிலையில் உள்ளது. இம்மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும்.

மேலும், பழைய கட்டடத்தில் சுமாா் 900 லிட்டா் மற்றும் 650 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இப்பணி இம்மாத இறுதிக்குள் முடிவடையும். அதிலிருந்து வரும் செப்டம்பா் முதல் வாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com