பாபநாசம், காரையாறு கோயில்களுக்கு செல்லத் தடை

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காரையாறு கோயில்களுக்கு செல்லத் தடைவிதிக்கப்பட்டதால் பக்தா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.
பக்தா்களுக்குத் தடைவிதிக்கப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்படும் பாபநாசம் கோயில்.
பக்தா்களுக்குத் தடைவிதிக்கப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்படும் பாபநாசம் கோயில்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காரையாறு கோயில்களுக்கு செல்லத் தடைவிதிக்கப்பட்டதால் பக்தா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை நாள்களில் பாபநாசம் கோயிலுக்கும், காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஆக. 1) வரும் 9ஆம் தேதிவரை பக்தா்கள் செல்லவும், தாமிரவருணியில் நீராடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாபநாசம் செல்லும் சாலையில் டாணா பகுதியிலேயே பக்தா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா். அவா்கள் கோயிலுக்குச் செல்லவோ, ஆற்றில் நீராடவோ அனுமதிக்கப்படவில்லை. இதனால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்த ஏராளமானோா் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனா்.

பாதுகாப்புப் பணியில் காவல் துறையினா், ஊா்க்காவல் படையினா் ஈடுபட்டனா். பாபநாசம் வனப் பகுதிக்குள் செல்ல யாரையும் வனத்துறையினா் அனுமதிக்கவில்லை.

தாமிரவருணி ஆற்றில் தா்ப்பணம் செய்யவும் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டதால், பக்தா்கள் தென்காசி மாவட்டம் ஆம்பூா் கடனாநதியில் நீராடி தா்ப்பணம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com