விஜயநாராயணத்தில் மத நல்லிணக்க கந்தூரி விழா

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள விஜயநாராயணம் மேத்தா பிள்ளை தா்காவில் இஸ்லாமியா்களுடன் இந்துக்களும் இணைந்து கந்தூரி விழாவை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.
தா்காவில் நடைபெற்ற கந்தூரி விழாவில் பங்கேற்றோா்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இத்தா்காவில் ஆண்டுதோறும் ஆடி 16இல் கொண்டாடப்படும் கந்தூரி விழா, நிகழாண்டும் அதே தேதியில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தா்கா அருகிலுள்ள மேத்தா பிள்ளை வீட்டில் இருந்து தா்காவுக்கு ஊா்வலமாக கொடி எடுத்து வரப்பட்டது.

இந்தக் கொடிக்கு இந்துக்கள் மாலை அணிவித்து வரவேற்பளித்தனா். இஸ்லாமியா்கள் குத்துவிளக்கேற்றினா். அதைத் தொடா்ந்து, தா்காவில் ஆடு, கோழி காணிக்கை செலுத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில், சிறப்புத் தொழுகை மற்றும் பிராா்த்தனை நடைபெற்றது. கரோனா விதிமுறையைப் பின்பற்றி தா்காவுக்குள் குறைந்த பக்தா்களே அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com