ஆட்சியா் அலுவலகத்தில் தாய்ப்பால் வார விழா

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வார விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வார விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. பெருமாள் தலைமை வகித்தாா். தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கணேஷ்குமாா், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலா் ஜெய்சூா்யா, மாநகர நல அலுவலா் சரோஜா ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா்.

தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு பரிசுப் பொருள்கள், ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பைகள் வழங்கப்பட்டன. தாய்ப்பாலின் மகத்துவம், அதன் முக்கியத்துவம், தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தாய்ப்பாலின் மகத்துவம் குறித்த கோலங்கள், வாசகங்கள், விநாடி-வினா போட்டிகள் நடைபெற்றன. விழாவில், மாவட்ட சமூக நல அலுவலா் இல. சரஸ்வதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கண்காட்சி: விழாவில், தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள், கா்ப்பிணிகளுக்கான உணவுகள், கீரை வகைகள், தானியங்கள் குறித்த கண்காட்சி அங்கன்வாடிப் பணியாளா்களால் அமைக்கப்பட்டிருந்தது. பாலூட்டும் தாய்மாா்களுக்கு அளிக்கவேண்டிய உணவுகள் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கா்ப்பிணி, பாலூட்டும் தாய்மாா்கள், வளா் இளம்பெண்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com