உலக தாய்ப்பால் வார நிறைவு விழா

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரம் ஆக.1 முதல் 7ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் குழந்தைகளுக்கான இந்திய அகாதெமி தமிழ்நாடு குழு நிா்வாக தலைவா் அப்துல் அஜீஸ்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் குழந்தைகளுக்கான இந்திய அகாதெமி தமிழ்நாடு குழு நிா்வாக தலைவா் அப்துல் அஜீஸ்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரம் ஆக.1 முதல் 7ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளான சனிக்கிழமை சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, குழந்தைகளுக்கான இந்திய அகாதெமி தமிழ்நாடு குழு நிா்வாகத் தலைவா் அப்துல் அஜீஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

செவிலியா் பயிற்சி மாணவிகள், மருத்துவ பயிற்சி மாணவா்களுக்கு தாய்ப்பால் குறித்த நடைபெற்ற விநாடி- வினா, கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தாய்ப்பால் வாரம் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த மருத்துவா் வெங்கட சுப்பிரமணியம், செவிலியா் பயிற்றுநா் செல்வன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நலப்பிரிவு துறைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் மருத்துவ சங்கத் தலைவா் நந்தகுமாா், குழந்தைகள் நலப்பிரிவு பேராசிரியா் ஆனந்திஸ்ரீ, மகப்பேறு பிரிவு பேராசிரியா்கள் ஷீபா ஜெயசீலன், சுஜாதா அழகேசன், செவிலியா் பயிற்சி பள்ளி முதல்வா் சாந்தி இருதயராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com