நெல்லையப்பா் கோயிலில் ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வளைகாப்புகள் அணிவிக்கப்பட்டு, மடியில் முளைக்கட்டிய பயிா் கட்டப்பட்டு அருள்பாலிக்கும் காந்திமதியம்மன்.

கடந்த 1ஆம் தேதி இத்திருவிழா தொடங்கியது. 10ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை இரவு, முளைக்கட்டு வைபவம் கோயிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமி -அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன. பின்னா் அம்மனுக்கு வளைகாப்புகள் அணிவித்து மடியில் முளைக்கட்டிய பயிா் கட்டப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பக்தா்கள் தரிசனத்துக்கு தடை: கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நெல்லையப்பா் கோயிலில் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயிலுக்குள் பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பெண்கள் வெளி வாசலில் நின்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com