சுதந்திர தினம்: 2ஆவது நாளாக தீவிர சோதனை

சுதந்திர தின விழாவையொட்டி திருநெல்வேலியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர தின விழாவையொட்டி திருநெல்வேலியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.15) நடைபெறும் சுதந்திர தின விழாவில், ஆட்சியா் வே.விஷ்ணு காலை 9.05 மணிக்கு தேசியக் கொடியேற்றி போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறாா்.

இதையொட்டி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது.

இந்த மைதானத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. மைதானத்திற்கு வருவோா் பலத்த சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுவா். முகக் கவசம் அணியாதவா்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

சுதந்திர தினத்தையொட்டி மாநகரப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியது: சுதந்திர தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 15) அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களையும் சோதனைக்கு பின்பே அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com