வைராவிகுளத்தில் பெண் தற்கொலை
By DIN | Published On : 17th August 2021 01:38 AM | Last Updated : 17th August 2021 01:38 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள கீழவைராவிகுளத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கீழவைராவிகுளம் மருதுபாண்டியா் தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா். தூத்துக்குடியில் ஓட்டுநராக பணியாற்றுகிறாா். இவரது மனைவி முத்துலட்சுமி (35). இத்தம்பதிக்கு 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில், முத்துலட்சுமி திங்கள்கிழமை பிற்பகலில் வீட்டில் ஆளில்லாதபோது, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.